Dinaithal - தினஇதழ்

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா மறைவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் செய்தி

இயக்குனர் மற்றும்  ஒளிப்பதிவாளருமான  பாலுமகேந்திரா மறைவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் செய்தி

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா மறைவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் செய்தி

தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா உடல்நலக்குறைவால் இன்று காலமானார் அவரின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள  இரங்கல் செய்தியில்:

திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான  பாலுமகேந்திரா மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தோம். திரு.பாலுமகேந்திரா இடதுசாரி இலக்கிய அமைப்புகளோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்.

தன்னுடைய படைப்புகள் மூலம் மனிதநேயத்தையும், அன்பையும் வெளிப்படுத்தியவர். ஆழமான சமூக அக்கறை கொண்டவர். சாதி, மதவெறிகளுக்கு எதிராக தன்னுடைய படைப்பாக்கங்களில் முற்போக்கான கருத்துக்களை முன்வைத்தவர். அவர் கடைசியாக இயக்கி நடித்த “தலைமுறைகள்” திரைப்படத்திலும் தனது அழுத்தமான முத்திரையை பதித்தவர்.

அவருடைய மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், கலை உலக நண்பர்களுக்கும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English Summary

death of balumagendra : g ramakrishnan letter

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?