Dinaithal - தினஇதழ்

அரிதாகும் குடிநீரும் தாராளமாக கிடைக்கும் சாராயமும் !

tasmacதமிழக அரசு  இயக்கம்  அதிக கிளைகள் கொண்ட விற்பனை  நிறுவனம் எதுவென்றால் அது டாஸ்மாக் என்பதை அனைவரும் அறிவோம் .

சுகாதார நிலையங்கள் புகாத  கிராம இடங்களில் கூட டாஸ்மாக் பார் புகுந்து  விளையாடுகிறது.

மாலை வேளைகளில்  கிட்டத்தட்ட  ஐம்பது சதவீத ஆண்களிற்கு  அடைகள இடமாக , அல்லது அடையாள இடமாக டாஸ்மாக்  மாறி  விட்டது .

பணக்கார அரசியல்வாதிகளில் பாதி பேர் இப்போது  மது உற்பத்தி கூட  நிறுவனங்களையே  நடத்துகின்றனர் .
அந்த கூடத்தில் இருந்தே டாஸ்மாக்கிற்கு  விநியோகம் நடைபெறுகிறது.

இப்படி சாராயம் எந்த வித தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கையில் , அன்றாடம் பயன்படுத்தும்  நீருக்கும் குடி நீருக்கும் தமிழ்நாடு , குறிப்பாக சென்னை  கடும் தட்டுப்பாட்டை நோக்கி சென்று கொண்டு வருகிறது.

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 30 அடிக்கு கீழே சென்றதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை முற்றிலுமாக பொய்த்தது. இதனால் விவசாயம் முடங்கியது.

மழை இல்லாததால் தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடங்களோடு நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. மின்சார பற்றாக்குறையால் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு மோட்டார் இயக்கப்படாமல் கிராமங் களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னையிலும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

இந்நிலையில் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. தற்போது 30 அடிக்கு கீழே நிலத்தடி நீர் மட்டம் சென்று விட்டது. மாதம் அரை அடி அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலை, திருவான்மியூர், சவுகார்பேட்டை போன்ற இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 20 அடி முதல் 24 அடி ஆழத்துக்கு சென்று விட்டது. பெசன்ட் நகரில் 16 அடி ஆழத்திலும், கொளத்தூர், வடபழனி, தி.நகர், சேத்துப்பட்டு போன்ற இடங்களில் 27 அடி ஆழத்துக்கும், கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர் பகுதிகளில் 31 அடி ஆழத்துக்கும் நிலத்தடி நீர் மட்டம் சென்று விட்டது.

அதேபோல நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மளமளவென்று கீழ்நோக்கி செல்வதால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மெட்ரோ வாட்டரையே நம்பியிருக்கின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் லாரி உரிமையாளர்கள் தண்ணீர் விலையை இரு மடங்காக உயர்த்தியுள்ளனர்.

சென்னை மாநகரை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 1100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை உள்ளது. ஆனால் மெட்ரோ வாட்டர் சார்பில் 800 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. பற்றாக்குறை உள்ள 300 மில்லியன் லிட்டர் தண்ணீரை தனியார் டேங்கர் லாரிகள் சப்ளை செய்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விவசாய கிணறுகளில் பம்ப் செட் மூலம் தண்ணீரை உறிஞ்சி கொண்டு வரும் தனியார்,

ஒரு லாரி தண்ணீரை ரூ.3 ஆயிரத்துக்கு விற்கின்றனர். முன்பு ஒரு லாரி தண்ணீர் ரூ.1500க்கு விற்கப்பட்டது. பல அடுக்கு மாடி குடியிருப்புகள், அபார்ட்மென்ட்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களில் தண்ணீர் தேவை அதிகம் இருப்பதால் அவை இந்த லாரி தண்ணீரை நம்பியே உள்ளன. இதனால் சந்தடி சாக்கில் லாரி தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவசர தேவை மழை நீர் சேகரிப்பு

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் வருங்காலங்களில் அதை பாதுகாக்கும் வகையில் எல்லா கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனினும் பல கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டப்படவில்லை. சென்னை மாநகரில் மட்டும் 7.20 மில்லியன் கட்டிடங்கள் உள்ளன. இதில் 50 சதவீத கட்டிடங்களில்தான் மழை நீர் சேகரிப்பு வசதியுள்ளது. எல்லா கட்டிடங்களிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தால்தான் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். இது ஒன்றே இப்போதைக்கு செய்ய கூடியதான தீர்வாக இருக்கும் .

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?