Dinaithal - தினஇதழ்

எல்லை இல்லாமல் செல்லும் திருநங்கைகளின் திருவிளையாடல்கள் ?

எல்லை இல்லாமல் செல்லும் திருநங்கைகளின் திருவிளையாடல்கள் ?

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30,000 திருநங்கைகள் உள்ளனர். இந்திய அளவில் சில லட்சம் திருநங்கைகள்  இருப்பது உண்மை. இவர்கள் அனைவரும்  பெரும்பாலும் அவர்களது பிறந்த குடும்பத்தில் இருந்து ஒதிக்கி வைக்கப்பட்டு உள்ளனர்., வட மாநிலங்களில் இவர்களை தெய்வமாக கருதுகின்றனர்.

ஆனால் தென் மாநிலங்களில் இவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, கேலி கிண்டல் செய்யும் ஒரு காட்சி பொருளாக உள்ளனர். சிலர் சிறு தொழில் செய்து முன்னேறி வருகின்றனர் பல திருநங்கைகள் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவங்கள் செய்யும் உதவியால் இன்று சமுகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

திருநங்கைகள் சிலர் பாலியல் தொழிலும், பிச்சை எடுத்தும் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இவர்களில் சிலர் பிச்சை எடுப்பது என்ற நிலை மாறி இன்று மிரட்டி காசை பறிக்கும் கும்பலாக இவர்கள் மாறி உள்ளனர் என்பது தான் சோகம்.

இவர்களும் யாருக்கும் எந்த சட்ட மற்றும்  சமூக நடைமுரைகளிர்க்கும் கட்டுப்பட்டு நடந்ததாக தெரியவில்லை .

சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் இரயில் வண்டிகளில் இவர்களின் அராஜகத்திற்கு எல்லை இல்லை .

இவர்கள் 5 பேர் ஒரு குழுவாக  இரண்டம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளிடம் மிரட்டி பணத்தை பெறுகின்றனர். இவர்கள் பெரிதும் மிரட்டுவது 15 வயது முதல் 45 வயது உள்ள ஆண்கள் மட்டுமே அதிலும் குறிப்பாக குடும்பத்தோடு பயணிக்கும் ஆண்களே இவர்களின் இலக்கு.

10 ரூபாய் முதல்100 ரூபாய் வரை இவர்கள் ஒவ்வொரு பயணியிடம் இருந்தும் மிரட்டி பெறுகின்றனர்..

பயணிகள் எவரேனும் பணம் கொடுக்க மறுத்தால் திருநங்கைகள் குழுவாக சேர்ந்து கொண்டு பயணியை ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, அரை நிர்வாணமாக நிற்பது, ஆண்களின் அந்தரங்க உறுப்பை பிடிப்பது, முத்தம் இடுவது போன்ற அருவருக்க தக்க செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு பயந்தே பெரும்பாலான இரயில் பயணிகள் பணத்தை கொடுத்துவிடுகின்றனர்.
சிலர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இரயில் ஏறும் முன்பே 10 ரூபாய் தாள்களாக மாற்றி வைத்து கொள்கின்றனர். 50 ரூபாய் மேல் பணம்  கொடுத்தால் அவர்களை மனதார  வாழ்த்துகின்றனர்.

மேலும் இதில் பெரிய கொடுமை என்ன வென்றால் சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு செல்வதற்குள் பல திருநங்கைகள் பல குழுவாக  ஓவொரு இரயில் நிலையத்திலும் ஏறுகின்றனர். இதே போல் மிரட்டி பணம் பெறுகின்றனர். சென்னைளிருந்து டெல்லி செல்வதற்குள் 100 ரூபாய்  முதல் 150 ரூபாய் வரை இவர்களுக்கு கொடுக்கவேண்டி உள்ளதாக பயணிகள் குறை கூறுகின்றனர்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் முதியவர்கள் , உடல் மற்றும் பார்வை மாற்று திறநாளிகள் இவர்கள் வந்து பிச்சை கேட்டால் பயணிகள் 1 ரூபாய் கூட பிச்சையாக போடுவது கிடையாது. ஆனால் பல பயணிகள் திருநங்கைகள் பணத்தை கேட்பதற்கு முன்பே கொடுத்துவிடுகின்ரனர்.

மற்றும் சென்னை மெரினா கடற்கரை, பூங்கா போன்ற மக்கள் கூடும் இடங்களில் தனியாக இருக்கும் காதல் ஜோடிகளையும் மிரட்டி பணம் பெறுகின்றனர்.

காவல் துறையோ, ரயில்வே போலீஸ் நிர்வாகமோ இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் அது நிரந்தர தீர்வை ஒன்றை தருமா என்ற கவலையும் பயமும் ரயில் பயணிகள் அனைவரிடம் உள்ளது .

Summary

There are about 30,000 thirunangaikal in tamil nadu. many of them work in small companies and do small buissness some of them indulge in sex related works. and some go begging in trains and road side shops.

Now they are demanding compoulsory  money from each and every passenger in second class reservation compartments. passengers who refuse to give money when they demand are harrezed by vulgure words and some vulgure activies are done. So the passengers are compelled to give money without refusing

Police has to take necessary action against these people is the need of the hour.

News : Keerthi

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?