Dinaithal - தினஇதழ்

பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு கருணாநிதி வாழ்த்து!

பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு கருணாநிதி வாழ்த்து!

பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு கருணாநிதி வாழ்த்து!

இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க போகும் மோடிக்கு கருணாநிதி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய பிரதமராக மோடி வருகிற 26 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு திமுக. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்,

''பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் நீங்கள் ஒரு மனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழத்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

குஜராத்தில் வியக்கதக்க பணிகளை மேற்கொண்ட நீங்கள், இன்று நாட்டின் உயர்ந்த நிலையை அடைந்து இருக்கிறீர்கள். இதற்கு உங்களது அறிவு திறன், உழைப்பு, கடுமையான பணி தான் காரணமாகும்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நீங்கள் நேற்று ஆற்றிய உரை ஏற்றுக்கொள்ள தக்க வகையில் இருந்தது. அனைத்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

பிரதமராக பொறுப்பேற்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"

என்று அதில் அவர் கூறியுள்ளார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us