Dinaithal - தினஇதழ்

பா.ஜனதா பொதுக்கூட்டம் அத்வானியின் காலை தொட்டு வணங்கினார் மோடி

பா.ஜனதா பொதுக்கூட்டம் அத்வானியின் காலை தொட்டு வணங்கினார் மோடி

பா.ஜனதா பொதுக்கூட்டம் அத்வானியின் காலை தொட்டு வணங்கினார் மோடி

மத்தியப்பிரதேசத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி மத்தியப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான்  ஏற்பாடு செய்தார்.  

இக்கூட்டத்தில் பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல் மந்திரியும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, முதல் மந்திரி சிவ்ராஜ் சிங் சவுஹான் மற்றும் முக்கியத்தலைவர்கள், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் ஆரம்ப முதலே நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மூத்த தலைவர் எல்.கே. அத்வானி முதல் முறையாக நரேந்திர மோடியுடன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது நரேந்திர மோடி எல்.கே. அத்வானியின் காலை தொட்டு வணங்கினார். உடனே அத்வானி, மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டத்தில் முன்பு எல்.கே. அத்வானி கலந்துகொள்ளவில்லை. இதனால் கட்சியின் ஒற்றுமை மற்றும் வலிமையை காட்ட முடியாமல் ராஜ்நாத் சிங் பெரிதும் கவலையடைந்தார். அதனையடுத்து மோடி மற்றும் அத்வானி இடையே விரிசல் நிலவியது. இந்நிலையில் 15 நாட்களுக்கு பிறகு அத்வானி மோடியை போற்றி புகழ ஆரம்பித்தார்.

இன்று ஒரே மேடையில் இருவரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

English Summary:

Pop . Janata Treated touch the feet of meeting Advani, Modi

Madhya Pradesh . Janata Party chief of the grand general meeting arranged civraj Singh Chauhan .

Bharatiya Janata Party 's national president Rajnath Singh at the meeting , senior leader LK Advani , Gujarat Chief Minister Narendra Modi, Bharatiya Janata Party 's candidate for prime minister , Sushma Swaraj , Arun Jaitley , the First Minister civraj Singh Chauhan and MainTitle , volunteers participated in hundreds of thousands .

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?