Dinaithal - தினஇதழ்

அத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கீடு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி


அத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கீடு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

புதுடெல்லி :அத்வானியின் தனி அறையில் இருந்து அவரது பெயர் பலகை நீக்கப்பட்டதை அடுத்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றப்புள்ளி வைக்கும் விதததில், அத்வானிக்கு மீண்டும் தனது தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் அத்வானிக்கு நாடாளுமன்றத்தின் 4ம் எண் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. திடீரென அவரது அறையின் வாயிலில் இருந்து அவரது பெயர் பலகை நீக்கப்பட்டது.

மேலும் அதைத் தொடர்ந்து அவர் நடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கும் அறையிலேயே ஒய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது அத்வானி 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அறைக்கு வெளியே மீண்டும் அவரது பெயர்ப்பலகை பொறுத்தப்பட்டுள்ளது.

இன்று காந்திநகரில் அத்வானி  வாக்குப்பதிவு செய்தார்

இன்று காந்திநகரில் அத்வானி வாக்குப்பதிவு செய்தார்

பா.ஜ.க  மூத்த தலைவர் அத்வானி அவரது மகள் பிரதிபாவுடன் சேர்ந்து இன்று காந்திநகர் தொகுதியில் வாக்கு பதிவு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது

இந்திய ஜனநாயகம் சிறப்பானது அதில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தலை சுமுகமாக நடத்தும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக்கொள்வதாக அத்வானி கூறினார்.

English summary


today advani voted in gandhinagar

தமிழகத்தில் இந்த தேர்தலில் அரசியல் சூழல் மாறியுள்ளது: அத்வானி

தமிழகத்தில் இந்த தேர்தலில் அரசியல் சூழல் மாறியுள்ளது: அத்வானி

பாஜக., மூத்த தலைவர் அத்வானி இன்று  வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி,

பாஜக தேர்தல்  அறிக்கையில் தமிழக பிரச்சனைகள் இடம்பெறவில்லை என்பது சரியல்ல. பிரச்சனைகளை அணுகுவதில் பாஜக பாரபட்சம் காட்டுவதில்லை. வாஜ்பாய் ஆட்சியின்போது நதிகளை இணைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தென்னத்தில் அமைத்த கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியுள்ளது என்றார்.

English summary

political trend in tamil nadu has been changed completely

எங்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள்; உங்களுக்கு நாங்கள் நல்லதை செய்கிறோம் : அத்வானி

எங்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள்; உங்களுக்கு நாங்கள் நல்லதை செய்கிறோம்: அத்வானி

எங்களுக்கு நீங்கள் நாட்டை ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தால், நாங்கள் உங்களுக்கு நாட்டின் வளர்ச்சிக்கான நல்ல திட்டங்களை செய்வோம் என்று பாஜக.,மூத்த தலைவர் அத்வானி இன்று கூறினார்.

இன்று பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய அத்வானி,

நாட்டு மக்கள் எங்களுக்கு நாட்டை ஆளும் அதிகாரத்தை கொடுத்தால், இந்த நூற்றாண்டுக்கான நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவோம் என்று கூறினார்.

Engish summary

give us the power we will do good for u : adavani 

அத்வானி சமரசம் அடைந்தார் : பா.ஜ.க.,வில் நிம்மதி


அத்வானி சமரசம் அடைந்தார் : பா.ஜ.க.,வில் நிம்மதி

பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானிக்கு, கட்சியின் பார்லிமென்ட் போர்டு காந்திநகர் தொகுதியை ஒதுக்கியது.

ஆனால், அதை ஏற்க மறுத்த அத்வானி, போபால் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், கட்சி தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், அத்வானி காந்திநகரில் தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நரேந்திர மோடி, சுஷ்மா, வெங்கையநாயுடு, ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் அத்வானியை வீட்டில் சந்தித்து, சமாதானப்படுத்தினர்.

இதனைதொடந்து காந்திநகர் தொகுதியில் போட்டியிட அத்வானி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary

advani now compromised : bjp happy

பா.ஜனதா பொதுக்கூட்டம் அத்வானியின் காலை தொட்டு வணங்கினார் மோடி

பா.ஜனதா பொதுக்கூட்டம் அத்வானியின் காலை தொட்டு வணங்கினார் மோடி

மத்தியப்பிரதேசத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி மத்தியப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான்  ஏற்பாடு செய்தார்.  

இக்கூட்டத்தில் பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல் மந்திரியும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, முதல் மந்திரி சிவ்ராஜ் சிங் சவுஹான் மற்றும் முக்கியத்தலைவர்கள், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் ஆரம்ப முதலே நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மூத்த தலைவர் எல்.கே. அத்வானி முதல் முறையாக நரேந்திர மோடியுடன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது நரேந்திர மோடி எல்.கே. அத்வானியின் காலை தொட்டு வணங்கினார். உடனே அத்வானி, மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டத்தில் முன்பு எல்.கே. அத்வானி கலந்துகொள்ளவில்லை. இதனால் கட்சியின் ஒற்றுமை மற்றும் வலிமையை காட்ட முடியாமல் ராஜ்நாத் சிங் பெரிதும் கவலையடைந்தார். அதனையடுத்து மோடி மற்றும் அத்வானி இடையே விரிசல் நிலவியது. இந்நிலையில் 15 நாட்களுக்கு பிறகு அத்வானி மோடியை போற்றி புகழ ஆரம்பித்தார்.

இன்று ஒரே மேடையில் இருவரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

English Summary:

Pop . Janata Treated touch the feet of meeting Advani, Modi

Madhya Pradesh . Janata Party chief of the grand general meeting arranged civraj Singh Chauhan .

Bharatiya Janata Party 's national president Rajnath Singh at the meeting , senior leader LK Advani , Gujarat Chief Minister Narendra Modi, Bharatiya Janata Party 's candidate for prime minister , Sushma Swaraj , Arun Jaitley , the First Minister civraj Singh Chauhan and MainTitle , volunteers participated in hundreds of thousands .

2014 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சாதனை படைக்கும் -அத்வானி நம்பிக்கை

2014 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உறுதியுடன் தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடு காரணமாக நாடு முழுவதும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக மக்களின் மனநிலை உள்ளது. 5 மாநிலங்களில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் பாஜக முந்தைய சாதனைகளை முறியடித்து அமோக வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்று பேசினார்.

மத்திய அரசின் ஊழல்கள் குறித்துப் பேசிய அத்வானி, ஊழல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் அரசின் தோல்வியை முன் வைத்து அடுத்த தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். பாராளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்றும், பாஜக தொண்டர்கள் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டும் என்றும் அத்வானி பேசினார்.

ஒரே மேடையில் அத்வானி, மோடி, ராஜ்நாத் சிங் !  மகிழ்ச்சியில் கட்சித் தொண்டர்கள்

குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும், வாஜபாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இணை மந்திரியாக பதவி வகித்தவருமான பாவ்னா சிக்காலியா கடந்த ஜூன் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் அஞ்சலி கூட்டம் குஜராத் மாநிலம், ஜூனகத் பகுதியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் குஜராத்தில் உள்ள கேஷோட் விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

தனி ஹெலிகாப்டர் மூலம் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி ஜூனகட் வந்தடைந்தார். அவர்கள் மூவரும் ஒரே மேடையில் அமர்ந்து அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்றனர்.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரக்குழு தலைவராக நரேந்திர மோடியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க.வில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அத்வானி கடந்த மாதம் அறிவித்தார். ராஜினாமாவை கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

பின்னர் நடந்த சமரச பேச்சுவார்த்தையின் விளைவாக ராஜினாமாவை அத்வானி வாபஸ் பெற்றார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு 3 தலைவர்களையும் முதன் முறையாக ஒரே மேடையில் பார்த்த பா.ஜ.க. தொண்டர்கள் ஆனந்தமடைந்தனர்.

பாவ்னா சிக்காலியாவுக்கு அஞ்சலி செலுத்தி பேசிய ராஜ்நாத் சிங், 'கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தலைவர்களில் பாவ்னா மிக முக்கியமானவர். பாராளுமன்றத்திலும் அவர் சிறப்பாக பணியாற்றினார். அவரை இழந்தது வேதனையளிப்பதாக உள்ளது' என்றார்.

'பாவ்னாவின் மறைவு குறித்து மோடி எனக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். அவரது மறைவு பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய இழப்பாகும்' என்று அத்வானி கூறினார்.

பாவ்னாவின் கட்டுப்பாட்டை நினைவு கூர்ந்த நரேந்திர மோடி, 'மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறீர்களா? என பாவ்னாவிடம் நான் கேட்டபோது சற்றும் தயங்காமல் ஒப்புக்கொண்டார்.

4 முறை எம்.பி.யாகவும், ஒருமுறை மத்திய இணை மந்திரியாகவும் பதவி வகித்த யாரும் அவ்வளவு எளிதாக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட முன்வர மாட்டார்கள். நான் கூறியதற்கிணங்க அவர் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிட்டார்' என்று பேசினார்.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?