Dinaithal - தினஇதழ்

ஆயுத கொள்முதலுக்கு முன்னுரிமை:  பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

ஆயுத கொள்முதலுக்கு முன்னுரிமை:  பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

நாட்டின் பாதுகாப்பிற்காக முப்படைகளுக்கான ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மத்திய நிதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மும்பை சென்றார்.

அங்கு வீராட் ஐ.என்.எஸ். கப்பலுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். பின்னர் கப்பலில் இருந்து கடலோர பகுதி பாதுகாப்பை பார்வையிட்டார்.
 
அதனைத் தொடர்ந்து கடற்படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அருண் ஜெட்லி கூறுகையில்,

மேலும்  நாட்டின் பாதுகாப்பிற்காக முப்படைகளுக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். கடற்படையில் நடந்த தொடர் விபத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என்றார்.



 

நரேந்திர மோடி கூட்டத்திற்கு வரி : அருண் ஜெட்லி கண்டனம்

நரேந்திர மோடி கூட்டத்திற்கு வரி: அருண் ஜெட்லி கண்டனம்

நரேந்திர மோடி கூட்டத்திற்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறி உள்ள ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி,

"நரேந்திர மோடியின் பிரசாரத்தை முடக்க மத்திய அரசு ஒரு புதிய, அதிசயமான ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது. மோடியின் கூட்டங்களுக்கு வரி விதிப்பது என்ற முடிவு தான் அது. மோடிக்கு குவியும் கூட்டத்தை பார்த்து, அதை தடுக்க நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வகுத்துள்ள புதிய வியூகம் இது," என்றார்.

English Summary

collecting tax on narendra modi election campaign is not correct : arun jaitley

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?