Dinaithal - தினஇதழ்

ஆமாம் நான் லஞ்சம் கேட்டது உண்மைதான் , வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் .

கர்நாடக மாநில சட்டசபை  மேல்சபைத் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விஜிகவுடா பாட்டீல் என்பவர் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பி முன்னாள் முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமியிடம் ஆதரவு கேட்டார்.

 

அப்போது எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி. தேர்தலில் ஆதரவு தருவதற்கு ரூ.1 கோடி வேண்டும் என்று கேட்பதாக குமாரசாமி கூறியுள்ளார். பின்னர் ரூ. 20 கோடி தாருங்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சிக்கிறேன் என்று குமாரசாமி கூறியுள்ளார். இதற்கிடையே விஜிகவுடா பாட்டீல், குமாரசாமியுடன் நடைபெற்ற உரையால் தொடர்பாக 35 நமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர்களது பேச்சு வீடியோவாக உள்ளூர் தொலைக் காட்சியில் வெளியானது இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தொலைபேசி உரையாடலில் இடம் பெற்று இருப்பது தன்னுடைய குரல்தான் என்பதை ஒப்புக் கொண்டார்.  மேலும், தான் ஒன்றும் பெரிய குற்றத்தை செய்யவில்லை என்று கூறியுள்ளார். மாநிலத்தில் 2008ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் சூழ்நிலையில் மாறிவிட்டது. எம்.எல்.சி. தேர்தலில் ஆதரவு தர மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பணம் கேட்கவில்லை. காங்கிரஸ் பாரதீய ஜனதாவும்  இதனையே செய்கின்றன. இதுதொடர்பாக விவாதம் நடத்த தயராக இருப்பதாக குமாரசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலில் ஆதரவு அளிக்க பேரம் பேசுவது நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் நடப்பதுதான். தற்போதைய அரசியல் நிலவரத்தையே நான் எடுத்துக் கூறினேன். ஆனால், பணம் எதுவும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒட்டன்சத்திரம் பகுதியில் 1000 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு

ஒட்டன்சத்திரம் பகுதியில் 1000 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கடந்த மாதத்தில் இங்கு கள்ளநோட்டு புழக்கம் அதிகம் இருப்பது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வியாபாரிகளிடம் கொடுத்து விட்டு செல்வதால் அதனை வங்கியில் கொண்டு செலுத்தும்போது அவை போலி என வங்கி அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் ஒட்டன்சத்திரம் நகரில் 1000 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் நான்கு வங்கிக்கு வந்துள்ளது. இந்த நோட்டுகள் யாரிடம் வாங்கியது என்று தெரியாமல் அதனை வங்கிக்கு செலுத்த வந்த வாடிக்கையாளர்கள் குழம்பி வருகின்றனர்.

எனவே இதுபோன்ற சமயத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அச்சுறுத்தி வரும் கள்ளநோட்டுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாலையில் கேட்பாரற்று கிடந்த 1.15 கோடி ரூபாய்!

சாலையில் கேட்பாரற்று கிடந்த 1.15 கோடி ரூபாய்!

மேற்கு வங்கம், கோல்கட்டா, சால்ட் லேக் பகுதியில், சாலையில் ஒரு டிரங்க் பெட்டி கேட்பாரற்று கிடந்தது.

இது குறித்து அந்தவழியாக சென்ற ஒருவர், உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார்.

 சந்தேகத்தி்ன் பேரில் போலீசார் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதற்குள் 1.15 கோடி ரூபாய் பணம் இருந்தது.

இந்நிலையில், பெட்டியும், பணமும் தங்களுடையது என ஆக்ஸிஸ் பேங்க் கோரியது. வழக்கமான சோதனைகளுக்கு பின்னர், பேங்க் அதிகாரிகளிடம் பணமும், பெட்டியும் ஒப்படைக்கப்பட்டது.

 

English summary

rs 1.15 cr in road

சென்னை ஆவடி அருகே கழிவுநீர் கால்வாயில் கட்டுக்கட்டாக  பணம்....

சென்னை ஆவடி அருகே கழிவுநீர் கால்வாயில் கட்டுக்கட்டாக பணம்....

ஆவடியில் உள்ள குடியிருப்பு பகுதியான, பக்தவச்சலபுரம் 2-வது தெருவில் சாலை ஓரத்தில் செல்லும் கழிவு நீர் கால்வாயில்,
நேற்று காலை 9 மணி அளவில் திடீரென ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மிதந்து வந்தன.

இதை பார்த்த அப்பகுதி பொது மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிச்சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்தனர். இதனையடுத்து துப்புரவு பணியாளர்களின் உதவியுடன், கால்வாயில் மேலும் பணம் இருக்கிறதா? என்று சோதனையிட்டனர்.

மேலும் சுமார் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சிக்கியது. இந்த பணம் வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்தவர் வங்கி  கணக்கில் பணம் செலுத்த புதிய முறை

அடுத்தவர் வங்கி  கணக்கில் பணம் செலுத்த புதிய முறை:

லஞ்சம், பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்புதல், சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கான பணப் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. 'வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர் குறித்த உண்மை விவரங்களை வைத்திருப்பதுடன், முறைகேடான பண பரிமாற்றத்தை தடுக்க கவனமாக செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதை பின்பற்றி, பல வங்கிகள், புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த துவங்கியுள்ளன.

முதல் கட்டமாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,), அதன் வாடிக்கையாளராக இல்லாதவர்கள், வெளியூரில் உள்ள, அதன் வாடிக்கையாளருக்கு, பணம் செலுத்தும் போது, அந்த நபரின், விவரங்களை அறியும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 அதன்படி, எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர் கணக்கில் பணம் செலுத்துவோர், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும், ஒரு அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன், வங்கியில் வழங்கப்படும், 'கிரீன் ரெமிட் கார்டு' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

பின், வங்கியில் இருந்து, 'கிரீன் ரெமிட் கார்டு' என்ற கார்டு வழங்கப்படுகிறது. இதற்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கார்டு மூலம், ஒருவர் கணக்கில் மட்டுமே பணம் செலுத்த முடியும். ஒரு மாதத்திற்கு, ஒருவர் கணக்கில், அதிகபட்சமாக, 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம்.

 இதற்காக, எஸ்.பி.ஐ., கிளைகளில், தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, வரவேற்பு காணப்பட்டாலும், பணம் செலுத்த வழங்கப்படும், 'கிரீன் ரெமிட் கார்டு'க்கு கட்டணம் வாங்காமல், இலவசமாக வழங்குவதுடன், பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து, எஸ்.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மே மாதம், 'கிரீன் ரெமிட் கார்டு' திட்டம் அறிமுகம் செய்தாலும், தற்போது தான், முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், லஞ்ச பணத்தை தருவோரிடம், உறவினர் பெயரில், டிபாசிட் செய்ய சொல்கின்றனர். சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் போது, பணம் செலுத்திய நபரின் விவரங்களை, வங்கிகளிடம் கேட்கின்றனர்.

எனவே தான், வங்கி வாடிக்கையாளராக இல்லாதோர், வங்கி வாடிக்கையாளர் கணக்கில், பணம் செலுத்தும் போது, அடையாள ஆவணங்கள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம், முறைகேடான பண பரிமாற்றம் தடுக்கப்படும். துவக்கத்தில், கார்டு இலவசமாக வழங்கப்பட்டது. பலர், கார்டை வீட்டில் வைத்து விட்டு, தொலைந்து விட்டதாக, புதிய கார்டு கேட்கின்றனர். அதை குறைக்கவே, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

English Summary:

 Bank account to pay for the new system :

Bribery , sending money to terrorists , anti-social activities , including gambling has been increasing for the money transfer . ' Banks , to keep their customer with details about the truth , must be careful to prevent fraudulent financial transactions that  the Reserve Bank said . Following this , many banks have started to introduce new practices .

In the first phase , the State Bank ( SBI ) , and those of its clients , in outstation , to its customers , while paying the money , the person , in terms of information , has introduced a new plan .

கஸ்தூரிராஜா இயக்கத்தில்  “காசு பணம் துட்டு “ [படங்கள்]

தனுஷ் நடித்த 3 படத்தைத்  தொடர்ந்து R.K.PRODUCTIONS(P)Ltd  பட நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிக்கும் படத்திற்கு “காசு பணம் துட்டு “ என்று பெயரிட்டுள்ளனர்

கஸ்தூரிராஜா இயக்கத்தில் “அசுரகுலம்” என்ற பெயரில் தயாரான படமே “காசு பணம் துட்டு”என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவர உள்ளது இதே பெயரில் மலையாளத்திலும் இப்படம் தயாராகியுள்ளது

இந்த படத்தில் மித்ரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகிகளாக சானியா மற்றும் மும்பையைச் சேர்ந்த சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கிறார்கள் முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத்,மினடிஸ்,அஜீத்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

clik


இசை  - சாஜீத் . இவர் A.R.ரஹைனாவின் உதவியாளர்.
நடனம் / ஸ்டன்ட் -  பாலா
எடிட்டிங் -  அபிலாஷ் விஸ்வநாத்
கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி இயக்குகிறார் – கஸ்தூரிராஜா
தயாரிப்பு -  திருமதி.விஜயலட்சுமி கஸ்தூரிராஜா.


படம் பற்றி இயக்குனர் கஸ்தூரிராஜாவிடம் கேட்டோம்...

சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது.குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்த சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது.

பிறக்கின்ற குழந்தைகள் எதுவும் கிரிமினலாகப் பிறப்பதில்லை சூழ்நிலைதான் அவர்களை கிருமினல்களாக்குகிறது.

இவர்கள் வாழும் வாழ்க்கையில் தவறுகளில்லை ஆனால் தவறுகளே வாழ்க்கையாகிப் போவதுதான் கொடுமை. இவர்களை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ...

‘’சென்னை நகரத்து பூங்கா புதர்களில்,குடிசைகளில் குப்பை புதர்களில்,நடைபாதையோரத்து,சந்து பொந்துகளில்,ரயில் நிலையங்களின் மறைவிடங்களில்,கூவத்தின் கரையோரங்களில் அடங்கிப் போன கவிதைகள்.

இதுதான் கதைக்களம் ...கஸ்தூரிராஜா படமென்றால் இப்படிதான் இருக்கும் என்கிற வரைமுறைகளை மாற்றிக் காட்டும் படமாக “காசு பணம் துட்டு”இருக்கும் என்கிறார் இயக்குனர் கஸ்தூரிராஜா.

மும்பையில் 4 லாரிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காகவா???

கடந்த 1ம்  தேதி மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில், கோடி கணக்கான ரூபாய் நோட்டுகளும், ஏராளமான தங்க, வைர நகைகளும் 4 லாரிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அவை தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத்தில் வைர வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளின் பணமாகவும் இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. மும்பையில் வேலைக்குச் செல்வோருக்கு குறித்த நேரத்தில் உணவு வழங்கும் டப்பாவாலாக்கள் போல, வைர விற்பனையில் ஈடுபடுவோருக்கு 'அங்காடியாக்கள்', என்ற ஒரு பிரிவினர் போக்குவரத்துப் பணியில் உதவி புரிகின்றனர்.

மும்பையில் உள்ள வியாபாரிகளுக்கு வெளியிலிருந்து வரும் பட்டை தீட்டப்படாத வைரங்கள் பிரிக்கப்பட்டு, பட்டை தீட்டுவதற்கும், பாலிஷ் போடப்படுவதற்கும் வெளியில் அனுப்பப்படும். பொதுவாக, அவை குஜராத் மாநிலத்திற்கே கொண்டுவரப்படும் பின்னர், அங்கிருந்து மீண்டும் அந்த வைர வியாபாரிகளிடம் கொண்டு சேர்க்கப்படும் இந்த வேலையை அங்காடியாக்கள் செய்து வருகின்றனர்.

குஜராத் பகுதியிலிருந்தே இந்த வேலைக்கு வரும் அங்காடியாக்களை நம்பும் வியாபாரிகள் அவர்கள் கொடுக்கும் பார்சலைப் பிரித்து சோதனை செய்ய மாட்டார்கள். ஆயினும், தாங்கள் கொண்டுசெல்லும் பொருட்களின் மதிப்பிற்கு காப்பீடு செய்யப்பட்ட, போக்குவரத்து கட்டணங்களுக்கு உரிய ரசீதை ஒப்படைத்து தங்களுக்குரிய கமிஷன் தொகையை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். பணம், நகைகள் மட்டுமின்றி, துணிகள் வாகன உதிரி பாகங்கள் போன்றவற்றையும் எடுத்துச் செல்லும் இவர்களின் தொடர்பு அமைப்பு மிகவும் பெரியதாகும்.

மும்பை, குஜராத் பகுதிகளில் மட்டும் 45 ஆயிரம் அங்காடியாக்கள் இருப்பதாகவும், அவர்கள் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள வைரங்களைக் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது. இவர்களின் பாதுகாவலுக்கு காவல்துறையினரின் அனுமதி பெற்று அவர்களின் வாகனமும், அங்காடியாக்களின் வாகனங்கள் உடன் செல்லும்.

மும்பையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் போக்குவரத்து ரசீதினைக் காட்டி அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் தொடர்பு இருந்தால் மட்டுமே மும்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வர் என்று உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டேல் தெரிவித்துள்ளார். முழுக்க, முழுக்க நம்பிக்கையின் பேரிலேயே செயல்பட்டுவந்த தங்களை ஹவாலா கடத்தலுடனும், தீவிரவாதிகளுடனும் தொடர்பு படுத்தியதால், அங்காடியாக்கள் தங்களின் செயல்பாடுகளில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் வருந்துகின்றனர்.

-தின இதழ் செய்தி குழு

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?