Dinaithal - தினஇதழ்

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு  விசாரணை முடிவு!

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு  விசாரணை முடிவு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தி வந்தது.

மேலும் இதன் முடிவில், சதித்தி்ட்டம் காரணமாகவே இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது என அறிக்கை அளித்துள்ளது.

மும்பையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் பலி

மும்பையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் பலி

மும்பை அருகே தானேவில் அரசு பயணிகள் பேருந்து வித்தல்வாடியிலிருந்து அகமத் நகர் நோக்கி 40பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்த பேருந்து தானே உள்ள மல்ஸ்கெஜ் என்ற இடத்தின் அருகே வந்தபோது, எதிரே வந்த வேன் ஒன்று அதன் மீது மோதியது.


இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அருகிலுள்ள 250 அடி ஆழ பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பெண்கள் உட்பட 27 பேர் பலியானதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து இதுவரை 17 பேர் மீட்கப்பட்டதாக தகவல் வெளியகிவுள்ளது.

மாமியார் பிரச்சனை! தனிக்குடித்தனம் செல்லும்  ஐஸ்வர்யா ராய்?

மாமியார் பிரச்சனை! தனிக்குடித்தனம் செல்லும்  ஐஸ்வர்யா ராய்?

அமிதாப், ஜெயா பச்சன் வீட்டிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாராம் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

காரணம் மாமியார் பிரச்சனை! அதாவது மாமியார் ஜெயாபச்சன் ஐஸ்வர்யா ராயின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு சுதந்திரத்தைக் காலி செய்கிறார்

ஜெயபச்சன்  கொடுமை படுத்தவில்லை. மாறாக ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் கூடுதலாக அக்கறை எடுத்துக் கொள்வது பெரும் இடைஞ்சலாக இருக்கிறது என்று ஐஸ் உணர்கிறாராம்.

இதனால் அபிஷேக் பச்சன், குழந்தை ஆரத்யாவுடன் தனியே செல்ல முடிவே எடுத்து விட்டதாக தெரிகிறது .

பாலிவுட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ள ஐஸ்வர்யா ராய் அனைத்து விவரங்களையும் தன்னுடன் பகிர்ந்து கொள்ளவேன்டும் என்று மாமியார் ஜெயா பச்சன் நினைக்கிறாராம். இது பெரிய இடைஞ்சலாக உள்ளதாக ஐஸ் உணர்கிறார்.

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்தது தரைமட்டம் : 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்தது தரைமட்டம் : 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் 60 பேரை மீட்கும் பணி நடைபெறுகிறது.

மும்பை டக்யார்டு ரோடு பாபுகெனு மார்க்கெட் பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மும்பை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வசித்து வந்தனர்.

இது 60 ஆண்டு பழமையான கட்டிடம் என்றும் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்தது. இன்று காலை 6.25 மணி அளவில் திடீர் என்று இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

அப்போது கட்டிடத்தின் உள்ளே 50 முதல் 60 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்.

உடனே போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மும்பையின் பல்வேறு இடங்களில் இருந்து 12 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4 ஆம்புலன்ஸ் வேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் இடிபாடுகளை அகற்றி 4 பேரை மீட்டனர். உடனடியாக அவர்கள் அரசு ஜெ.ஜெ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

5 மாடி கட்டிடத்தில் தரை தளம் குடோனாக செயல்பட்டது என்றும், கட்டிடத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் அருகில் வசித்து வரும் ஒருவர் தெரிவித்தார்.

English Summary:

5 -storey building in Mumbai debris torn : 60 people trapped in the rubble anxiety

Ground level of 5 -storey building collapses in Mumbai . 60 people trapped in the rubble and rescue operations in the know said .

Road Mumbai takyartu papukenu 5 -storey building collapse in the market . In the residential building owned by Mumbai Municipal Corporation employees lived .

மும்பையில் தொடரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது . இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது

மேலும் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் கனமழை பெய்துள்ளது. தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழையால் பள்ளி, அலுவலகம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்வதால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. குடியிருப்புப் பகுதகளில் வெள்ளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.

இதனையடுத்து மும்பையில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கனமழை தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மகாராஷ்டிரா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

மும்பையில் அடுத்த தாக்குதல்: புத்த கயாவில் குண்டு வைத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் மிரட்டல்

புத்த கயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக 9 குண்டுகள் வெடித்தன. அதில் 2 புத்த துறவிகள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் டிவிட்டர் இணையத்தளத்தில், புத்தர் கோவிலில் தாக்குதல் நடந்து சுமார் 12 மணி நேரம் கழித்து, ‘நாங்கள் 9 குண்டுகளை வெடிக்க வைத்தோம்’ என்ற தகவலை வெளியிட்டனர்.

இந்த நிலையில் விரைவில் மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக டிவிட்டர் மூலம் முஜாகிதீன் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் 6 ஆம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘எங்களது அடுத்த இலக்கு மும்பை. முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள். இன்னும் 7 நாட்கள் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த டிவிட்டர் மிரட்டல் குறித்தும், அந்த பக்கம் யாரால் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த இணையத்தள பக்கம் கனடாவில் இருந்து இயக்கப்படுவது தெரிந்தது.

இந்த மிரட்டலால், அடுத்து மும்பை நகருக்கு தீவிரவாதிகளால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

தீவிரவாத மிரட்டலால் தொடர்ந்து மும்பை நகரில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதும், 8 இந்திய நகரங்களில் ஏற்கனவே பாதுகாப்பு அதிகப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-தின இதழ் செய்தி குழு

மும்பையில் 4 லாரிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காகவா???

கடந்த 1ம்  தேதி மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில், கோடி கணக்கான ரூபாய் நோட்டுகளும், ஏராளமான தங்க, வைர நகைகளும் 4 லாரிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

அவை தீவிரவாதிகளுக்கு உதவுவதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத்தில் வைர வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளின் பணமாகவும் இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. மும்பையில் வேலைக்குச் செல்வோருக்கு குறித்த நேரத்தில் உணவு வழங்கும் டப்பாவாலாக்கள் போல, வைர விற்பனையில் ஈடுபடுவோருக்கு 'அங்காடியாக்கள்', என்ற ஒரு பிரிவினர் போக்குவரத்துப் பணியில் உதவி புரிகின்றனர்.

மும்பையில் உள்ள வியாபாரிகளுக்கு வெளியிலிருந்து வரும் பட்டை தீட்டப்படாத வைரங்கள் பிரிக்கப்பட்டு, பட்டை தீட்டுவதற்கும், பாலிஷ் போடப்படுவதற்கும் வெளியில் அனுப்பப்படும். பொதுவாக, அவை குஜராத் மாநிலத்திற்கே கொண்டுவரப்படும் பின்னர், அங்கிருந்து மீண்டும் அந்த வைர வியாபாரிகளிடம் கொண்டு சேர்க்கப்படும் இந்த வேலையை அங்காடியாக்கள் செய்து வருகின்றனர்.

குஜராத் பகுதியிலிருந்தே இந்த வேலைக்கு வரும் அங்காடியாக்களை நம்பும் வியாபாரிகள் அவர்கள் கொடுக்கும் பார்சலைப் பிரித்து சோதனை செய்ய மாட்டார்கள். ஆயினும், தாங்கள் கொண்டுசெல்லும் பொருட்களின் மதிப்பிற்கு காப்பீடு செய்யப்பட்ட, போக்குவரத்து கட்டணங்களுக்கு உரிய ரசீதை ஒப்படைத்து தங்களுக்குரிய கமிஷன் தொகையை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். பணம், நகைகள் மட்டுமின்றி, துணிகள் வாகன உதிரி பாகங்கள் போன்றவற்றையும் எடுத்துச் செல்லும் இவர்களின் தொடர்பு அமைப்பு மிகவும் பெரியதாகும்.

மும்பை, குஜராத் பகுதிகளில் மட்டும் 45 ஆயிரம் அங்காடியாக்கள் இருப்பதாகவும், அவர்கள் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள வைரங்களைக் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது. இவர்களின் பாதுகாவலுக்கு காவல்துறையினரின் அனுமதி பெற்று அவர்களின் வாகனமும், அங்காடியாக்களின் வாகனங்கள் உடன் செல்லும்.

மும்பையில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் போக்குவரத்து ரசீதினைக் காட்டி அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளின் தொடர்பு இருந்தால் மட்டுமே மும்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வர் என்று உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டேல் தெரிவித்துள்ளார். முழுக்க, முழுக்க நம்பிக்கையின் பேரிலேயே செயல்பட்டுவந்த தங்களை ஹவாலா கடத்தலுடனும், தீவிரவாதிகளுடனும் தொடர்பு படுத்தியதால், அங்காடியாக்கள் தங்களின் செயல்பாடுகளில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் வருந்துகின்றனர்.

-தின இதழ் செய்தி குழு

மும்பையில் மீண்டும் கட்டிட விபத்து: ஒருவர் பலி 18 பேர் உடல் நிலை கவலைக்கிடம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தானே பகுதியில் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தில் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நடந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளிலிருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டது.

இதுவரை 35 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இவர்களில் படுகாயமடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் இந்த இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிந்த கட்டிடத்தில் 3-வது மாடிக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்றது இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

இரண்டு மாதங்களில் நடந்த நான்காவது கட்டிட விபத்து இது ஆகும். கடந்த மாதம் 22ம் தேதி நடந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

-தின இதழ் செய்தி குழு

மும்பை : அரசு அலுவலகம்  திடீர் தீ விபத்து !

மும்பையில் பல்லார்டு பயர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான பல மாடி கட்டடம் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இன்று காலை இந்த கட்டடத்தில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 8 தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், கட்டடத்தின் உள்ளே சிக்கியுள்ளோரை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த பணியில் மும்பை போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?