Dinaithal - தினஇதழ்

குடியரசுத்தலைவர் அறிக்கை பாஜக.அரசின் வார்த்தை வாய்ஜாலம் : ஞானதேசிகன் குற்றச்சாட்டு


குடியரசுத்தலைவர் அறிக்கை பாஜக.அரசின் வார்த்தை வாய்ஜாலம் : ஞானதேசிகன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. பி.எஸ். ஞானதேசிகன் குடியரசுத்தலைவர் அறிக்கை பா.ஜ.க.வின் வார்த்தை வாய்ஜாலம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்


நேற்றைய குடியரசுத் தலைவர் உரையில் நடைமுறை சாத்தியமற்ற கவர்ச்சி காதிக அறிக்கையாகும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலங்களில் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கிய பா.ஜ.க.வினர் 2014-ம் ஆண்டில் கூச்சல், குழப்பம் இல்லாத, மக்களுக்காக செயல்படும் பாராளுமன்றம் உருவாக்கப்படும் என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளான இலங்கை தமிழர் பிரச்சனை, இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை, காவிரி நதிநீர் பங்கீடு, முல்லை பெரியாறு அணை, சேதுசமுத்திர திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றம் அளிக்கிறது. இவைகள் எல்லாம் இடம்பெறாத ஜனாதிபதி உரையை தமிழக அரசியல் கட்சிகள் சில அ.இ.அ.தி.மு.க.உட்பட பாராட்டுவது விந்தையாக உள்ளது.

மகாத்மா காந்தியடிகள், இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார். கிராம முன்னேற்றம் நாட்டின்வளர்ச்சி என்றார். ஆனால் குடியரசுத் தலைவர் உரையில் புதிய 100 நகரங்களை உருவாக்கப்படும் என்று அறிவித்திருப்பது கிராம முன்னேற்றத்திற்கு தடை வகுக்கும், நகரமயமாக்கலை ஊக்குவிக்கும்.

வைர நாற்கர ரயில் திட்டம் போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கது என்றாலும், புதிய நகரம், புதியஐ.டி.ஐ., ஐ.ஐ.எம்,; அனைத்து; மாநிலங்களிலும் எய்மஸ் துவஙக்பப்டும்,; டிஜிட்டல் இந்தியா, இளைஞர் மேம்பாட்டு திட்டம் போன்றவை ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியவை தான்.

குடும்பத்திறகு ஒரு வீடு என்ற  திட்டம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகலாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளிநாட்டு முதலீடுகளை குறை கூறியவர்கள் வெளிநாட்டு முதலீடு மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருப்பது விந்தையாக உள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல்,  லோக் ஆயுக்தா நீதிபதியை கடைசி வரை நோகடித்த பா.ஜ.க.வினர். இப்போது; லோக்பால் அமைப்பு வலுப்படுத்தப்படும் என்று கூறிருப்பது நகைப்பிற்குரியதாகும். 2012-க்குள் அனைவருக்கும் வீடு என்பது 2019ல் முடியும் 5 ஆண்டு கால வரம்பை தாண்டி செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது. போகாத ஊருக்கு வழிகாட்டுவதாக உள்ளது.

புதிய வேலை வாய்ப்பு திட்டம், புதிய தொழில் துவங்கும் திட்டம், புதிய தொழிற்சாலை ஊக்குவிப்பு திட்டம் ஏதுமில்லை. நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கான திட்டம் ஏதுமில்லாமல், புதிய அறிவிப்புகளை அறிவித்திரூப்பது புதிய அரசின் கவர்ச்சி வார்த்தை, வாய்ஜாலமாக உள்ளது.

நாட்டின் பாராளுமன்றத்தையே பாதுகாக்க தவறியவர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அறிவித்திருப்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். சுருக்கமாக சொன்னால் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரம் இன்னும் முடியவில்லை என்கிற உணர்வுதான் ஏற்படுகிறது.

மொத்தத்தில் குடியரசுத் தலைவர் உரை என்பது பா.ஜ.க.வின் வார்த்தை வாய்ஜாலம் ஆகும். இவ்வாறு ஞானதேசிகன் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் : ஞானதேசிகன் விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் :ஞானதேசிகன் விளக்கம்


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன் பட்டியலிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது, கடந்த டிசம்பர் மாதத்தில், கட்சியில் புதிய மாவட்ட , நகர அமைப்பின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள், குறைந்த கால அளவே இருந்ததால், அவர்களால், மக்களவை தேர்தல் நேரத்தில் திறம்பட செயல்பட முடியவில்லை.

மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பூரண மதுவிலக்கு உள்ளி்ட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டந்தோறும், தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஞானதேசிகன் கூறினார்.
 

முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பிறகும் மின்வெட்டு தொடர்கிறது: ஞானதேசிகன்


முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பிறகும் மின்வெட்டு தொடர்கிறது: ஞானதேசிகன்

சென்னையில் இன்று ஞானதேசிகன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த இக்கூட்டத்தில் தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, காவிரி நதிநீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், பூரண மதுவிலக்கு உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மின்வெட்டைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றும், கட்சியைப் பலப்படுத்த மாவட்ட வாரியாக தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. லோக்சபா தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஞானதேசிகன்,

“முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்ட பிறகும் தமிழகத்தில் மின்வெட்டு தொடர்கிறது. மத ஒற்றுமை மற்றும் சமூக சீர்திருத்தத்தை மத்திய அரசு காக்க வேண்டும்.
 
மேலும் இன்று  நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை யாரும் புறக்கணித்ததாகத் தெரியவில்லை’’ என்றார்.

பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி: தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கடும் கண்டனம்

பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி: தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கடும் கண்டனம்

இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது என்று ஞானதேசிகன் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் 'பாரத ரத்னா" ராஜீவ்காந்தி பயங்கரவாதத்தால் ஸ்ரீபெரும்புதூர் தமிழ் மண்ணில் மனித வெடிகுண்டால் சாய்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் - அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு சிரித்த முகத்தோடு தமிழகம் வந்திறங்கிய அந்த ரோஜா மலரை பாவிகள் இந்த மண்ணில் குற்றுயிரும், குலை உயிருமாக ஆக்கிவிட்டார்கள்.

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் ஜாதி, இன, மத என்று எந்த போர்வையிலும் அதனை எதிர்க்க வேண்டும் என்கிற உறுதிமொழியை ஏற்கிற நாளாக அமரர் ராஜீவ்காந்தி மறைந்த நாளில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. இந்த உறுதிமொழி ஏற்பு என்பது அரசியலைத் தாண்டி, யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் தாண்டி இந்த தேசத்தில் பயங்கரவாதத்தை வேறோடும், வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்கான உறுதிமொழியை ஏற்கிற நாள். இதற்கு கட்சி வண்ணம் கிடையாது. அரசியல் கிடையாது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த உறுதிமொழி ஏற்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரால் ஏற்கப்பட்டு அமரர் ராஜிவ்காந்தி திருவுருவப் படதத்திற்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் இது நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது.ஒரு பொதுவான உறுதிமொழியை, பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எடுக்கிறோம் என்பதை காட்டுகின்ற  நிகழச்சியாயாய் எடுக்கப்படுகிற இந்த உறுதிமொழி இனறு ஏன் ஏறகப்படவிலை எனபதை தமிழக அரசு விளக்க வேண்டும். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

 

ஜனநாயகத்திற்கும், தனிமனித சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: ஞானதேசிகன்

ஜனநாயகத்திற்கும், தனிமனித சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: ஞானதேசிகன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ஞானதேசிகன் இன்று வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது:

நாளை மறுநாள் இந்ததேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் நாள். பத்தாண்டு கால வளர்ச்சி, தகவல் பெறுகிற உரிமை, இலவச கட்டாய கல்விக்கான உரிமை, உணவுக்கான உத்திரவாதம் தருகிற உரிமை, லஞ்சத்தை நீக்குவதற்கு லோக்பால் சட்டம் என்று உரிமைகளை கொடுத்த காங்கிரஸ் ஆட்சி மீண்டும் தொடர உங்களை நாடிநிற்கிறோம்.

பத்தாண்டுக்கு முன்பு 5.9 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக சராசரி வளர்ச்சி பெற்றிருக்கிறது. 51,511கி.மீட்டராக இருந்த கிராமச் சாலைகளை 3,81,000 கி.மீட்டராக உயர்த்திகாட்டியிருக்கிறோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு 7,248 கோடிதான் சுகாதாரத்திற்கு செலவு செய்யப்பட்டது இன்று மத்தியஅரசால் 36,322 கோடி செலவு செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்குமுன்பு 9,71, 182 சுயஉதவிக்குழுக்கள் இருந்தன. இன்று வங்கிகளோடு தொடர்புடைய 41,16,000 பெண்கள் சுயஉதவிக்குழு உருவாகியிருக்கிறது.

பத்தாண்டுக்கு முன்பு 14,15,000 தான் சிறுபான்மையினரின்வங்கிகணக்கு 4,000 கோடிதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடனுதவி இன்று 121மாவட்டங்களில் 43, 52,000 வங்கி கணக்கு 66,500 கோடிரூபாய் கடனுதவி. பத்தாண்டுக்கு முன்புகல்விக்காக செலவிடப்பட்டது 10,145 கோடிதான். இனறு; காங்கிரஸ் அரசு கல்விக்காக செலவழிப்பது79,451 கோடி ரூபாய்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சுகாதாரத்திற்கான உரிமையை,ஓய்வூதியயத்திற்கான உரிமையை, குடியிருக்க சொந்த வீட்டிற்காக உரிமையை, சமூக பாதுகாப்பிற்கான உரிமையை தருவோம் என்று வாக்குறுதி அளித்திருக்கின்றோம்.

வளர்ச்சிப்பாதையில் 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வழிகாட்டுதலில் மன்மோகன்சிங் அரசு செயல்பட்டது. இந்தவளர்ச்சி வருகிற 5 ஆண்டுகளும் தொடரவேண்டும்.

தமிழகத்தில் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுகிற திராவிட இயக்கங்களால் இது முடியாது. வெற்றிபெற்றால் யார் பிரதமர் என்று சொல்லத் தெரியாத கட்சிகள் தமிழகத்தில் வாக்கு சேகரிக்கின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியும்.தனிமனித விமர்சனங்களுமே இவர்களுடைய கொள்கை.

எந்தவித பொருளாதார திட்டமோ, தொலைநோககு; பார்வையோ இந்த இயக்கங்களுக்கு கிடையாது.நடக்க இருக்கின்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே நடக்கின்றதேர்தல் அல்ல.இந்திய ஜனநாயக வரலாற்றில் கட்சிகளுக்குள்ளேதான் தேர்தலுக்கு போட்டியிருக்கும். ஆனால் விசித்திரமாக,வினோதமாக இந்ததேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், நரேந்திரமோடிக்குமான தேர்தலாகமாறியிருக்கிறது.

பாரதீய ஜனதா என்ற கட்சி மறைக்கப்பட்டு குஜராத்தில் இரத்தக் களரிக்கு வழிவகுத்த நரேந்திரமோடி முன்னிலைப்படுத்தப்படுகிறார். வளர்ச்சிக்கும்,அழிவிற்குமான தேர்தல், இது மதச்சார்பற்ற தன்மைக்கும், மதவாதத்திற்கும் நடைபெறும் தேர்தல்,ஜனநாயகத்திற்கும், தனிமனித சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்.

மக்களே! காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் வாக்குகளை கை சின்னத்தில் வாக்களித்து உறுதியான ஒருஅரசை மத்தியில் அமைப்பதற்கு உதவ வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ஞானதேசிகன் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அணைத்து இயக்கங்களை தடை செய்ய வேண்டும்: ஞானதேசிகன்


தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அணைத்து இயக்கங்களை தடை செய்ய வேண்டும்: ஞானதேசிகன்

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் இயக்கத்தை மத்திய, மாநில அரசுகள் அமைதிக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் இன்று வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர்,

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும், 4 பேருக்கு தண்டனை குறைப்பு எப்படி நியாயமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை காவல்துறை, அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்திய ஞானதேசிகன், தாக்குதலில் ஈடுபடும் அமைப்புகளை மீது தடை செய்ய வலியுறுத்துவோம் என்றார்.

மேலும் இந்த கருத்தில் உடன்பாடு இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், மாற்றுக் கருத்துக்காரர்கள் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும், சமூக விரோத சக்திகளை அனுமதித்தால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை நடந்த உள்நாட்டு போர்  மீது நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம் என்று ஞானதேசிகன் கூறினார்.

English summary

should ban all parties which support ltt

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us