Dinaithal - தினஇதழ்

கோடிகணக்கில் பணம் வந்தது எப்படி? மாஜிஸ்திரேட்டிடம் கரகாட்டக்காரி மோகனாம்பாள் அளித்த மனு விவரம்!

கோடிகணக்கில் பணம் வந்தது எப்படி? மாஜிஸ்திரேட்டிடம்
கரகாட்டக்காரி மோகனாம்பாள் அளித்த மனு விவரம்!


வேலூர் :காட்பாடி ரயில் நிலையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 கோடியே 4 லட்சத்து 73,500 ரொக்கம் மற்றும் 73 சவரன் நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தலைமையிலான போலீஸார் கைப்பற்றினர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கரகாட்டக்காரி மோகனாம்பாள், அவரது அக்கா நிர்மலா ஆகியோர் நேற்று வேலூர்  நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மனு விபரம் குறித்து அவர்களுடைய வழக்குரைஞர் பாபுராஜன் கூறியபோது,

மோகனாம்பாளும், மற்றும் அவரது குடும்பத்தினரும் கரகாட்டம் ஆடியது மற்றும் அதனால் கிடைத்த பணத்தை வட்டிக்கு விட்டே பணம் சம்பாதித்துள்ளனர். அதனால் சம்பாதித்த பணத்துக்கு ஆதாரங்கள் எதுவும் வைத்திருக்க வில்லை.மற்றபடி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் வட்டி தொழில் கிடைத்தது தான். இதுதொடர்பான வருமான வரித்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கும், தகவல்களையும் அளிக்க தயாராக இருக்கிறோம்.

மோகனாம்பாளுக்கு வலது கால் முட்டியில் ஏற்பட்ட வலி காரணமாக கடந்த மாதம் 25–ம்தேதி முதல் சென்னை தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார். 29–ம் தேதி மருத்துவமனையில் சேர்ந்தார். ஜூன் 2–ம் தேதி காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். போலீஸார் தங்களை தேடி வருவதும், தங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்து வருவதால் தாங்களாக முன்வந்து சரணடைந்துள்ளதாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளனர் என்றார்.
 

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?