Dinaithal - தினஇதழ்

தலித் மக்கள் குறைவாக வாழும் கிராமங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!



தலித் மக்கள் குறைவாக வாழும் கிராமங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!

தலித் மக்கள் குறைவாக வாழும் கிராமங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகாவை இன்று சந்தித்து கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் வ.க.செல்லப்பன் கடிதம் அளித்துள்ளார்.

மனுவிபரம்:

சிதம்பரம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் குறைவாக வசிக்கக்கூடிய கிராமங்களில் வன்முறை நடைபெற வாய்ப்புள்ளது. இச்செயலில் ஈடுபட பாட்டாளி மக்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

எனவே இச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணித்து தடுக்கவும், தலித் மக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் வ.க.செல்லப்பன் தெரிவித்துள்ளார்.

English summary

give additional security in villages with less dalith population :thol thiruvamvalavan

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?