Dinaithal - தினஇதழ்

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவ பட்டம்

  • Published inஉலகம்
  • Print

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவ பட்டம்

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவ பட்டம்

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற எடின்பர்க் பல்கலைக் கழகம் கவுரவ பட்டம் வழங்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக கடந்த 15-ம் தேதி இந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியாவை 2020ல் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உதவி செய்து வருவதையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதையும் அங்கீகரித்து பல்கலைக் கழகத்தின் முதல்வரும் துணைவேந்தருமான திமோதி ஓஷியா இந்த பட்டத்தை அப்துல் கலாமுக்கு வழங்கினார்” என்று கூறப்பட்டுள்ளது.

2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசு தலைவராக பதவி வகித்த கலாம்,  இந்தியாவின் கிராமப்புற ஏழ்மை நிலை தொடர்பாக பிரச்சாரம் செய்வதுடன், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை போக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்து வருகிறார்.














 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us